மேலும், தற்போது நடந்து முடிந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், மதிப்பெண், தேர்ச்சி விகிதம் என, போட்டி போட்டுக் கொண்டு முன்னிலை வகித்துள்ளனர். இதை எடுத்துக்கூறி, அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து, வெளியேறும் மாணவர்களை குறி வைத்து, அரசு பள்ளிகளில் சேர்க்கும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில்,''தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இது, நடந்து முடிந்த, அரசு பொதுத்தேர்வில் எதிரொலித்தது. இதை எடுத்துக்கூறி, அரசு பள்ளி மாணவர்களை முழுமையாக, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சேர்க்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளி மீதான கருத்து மாறுபட்டுள்ளதால், மேல்நிலை பள்ளிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.