Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் சென்னை மாணவர் முதலிடம்:
மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான
தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 132 பேர் 200க்கு 200
மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளிடம் மருத்துவ
கல்வி படிப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான பொது
கவுன்சலிங் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது என்று மருத்துவ கல்வி மாணவர்
சேர்க்கை செயலாளர் சுகுமார் தெரிவித்தார்.
தமிழகம்
முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2,555 இடங்கள்
உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் (383 சீட்டுகள்) போக 85
சதவீத சீட்டுகள் அதாவது 2,172 இடங்கள் உள்ளன.
மேலும்,
தமிழகத்தில் உள்ள 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,560 இடங்கள்
உள்ளன. இதில், நிர்வாக ஒதுக்கீடாக 646 இடங்கள் போக, பொது ஒதுக்கீடாக 993
இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது.
இதேபோல் அரசு பல் மருத்துவ
கல்லூரியில் உள்ள 85 சீட்டுகளும், 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள்
மூலம் 937 சீட்டுகளும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்த மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 14ம் தேதி முதல் வினியோகம்
செய்யப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.
இதில் 30,380 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம்
28 ஆயிரத்து 53 விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதில்,
மாணவர்களிடமிருந்து ஒன்றுக்கும் வகையில் வந்த 146 விண்ணப்பங்கள்,
தகுதியற்றதாக கருதப்பட்டு 368 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பித்தவர்களில் 27,539 பேரின் விண்ணப்பங்கள் இறுதியாக தகுதியின்
அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில்
மாணவர்கள் 10,105 பேர், மாணவிகள் 17,434 பேர். குடும்பத்தில் முதல்
பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் என்ற வகையில் 10 ஆயிரத்து 61 மாணவ, மாணவிகள்
தகுதி பெற்றுள்ளனர். முதல்கட்டமாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம்
எண், கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில்
உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், நேற்று தரவரிசை பட்டியலை மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இதைதொடர்ந்து மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவ
கல்வி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் உள்ள 132 பேர் 200க்கு 200
மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் தரவரிசை அடிப்படையில் சென்னை மேற்கு
மாம்பலத்தை சேர்ந்த சுந்தர் நடேஷ் முதலிடத்தையும், தேனாம்பேட்டை அபிஷேக்
2ம் இடத்தையும், ஈரோடு சோலர் புதூரை சேர்ந்த விஜயராம் 3ம் இடத்தையும்
பிடித்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள்
மற்றும் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 17ம்
நடைபெறுகிறது. பொது கவுன்சலிங், வரும் 18ம் தேதி தொடங்குகிறது.
இவர்களுக்கான அழைப்பு கடிதம் மருத்துவ கல்வி இயக்குனர் வாயிலாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். தரவரிசை பட்டியல் தொடர்பான விவரங்களை இணையதளம்
(ஷ்ஷ்ஷ்.tஸீலீமீணீறீtலீ.ஷீக்ஷீரீ)
மூலமாக தெரிந்து கொள்ளலாம். முதல் நாள் கவுன்சலிங்கில் பங்கேற்க 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கவுன்சலிங்கில்
பங்கேற்கும் மாணவர்களிடம் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். 2வது கட்ட
கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி நடக்கிறது. செப்டம்பர் 30ம் தேதி வரை அட்மிஷன்
நடைபெறுகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
இவ்வாறு சுகுமார் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை செயலா ளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உடனிருந்தனர்.
18ம் தேதி பொது கவுன்சலிங் மாணவிகள் அதிக ஆர்வம்
தரவரிசை
பட்டியலை வெளியிடுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அருகில், சுகாதாரத்துறை
செயலாளர் ராதா கிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி, மாணவர்
சேர்க்கை செயலாளர் சுகுமார்.
வகுப்புகள் செப்டம்பரில் துவக்கம்
மருத்துவ
கல்விக்கான முதற்கட்ட கவுன்சிலிங் வருகிற ஜூன் 18ல் துவங்கி 22ம் தேதி வரை
நடக்கிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில்
நடக்கிறது. வழக்கம் போல் மருத்துவ கல்வி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி
வகுப்புகள் துவங்கும். ஆனால், இந்தாண்டு செப்டம்பர் 1ம் தேதி வகுப்புகள்
துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








