குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் கடந்த 2009-10 ஆண்டில் 6700 மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் ராக்கிங் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.கல்வி நிலையங்களில் ராக்கிங் கொடுமைகளை தடுக்கும் வகையில் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் சிறார் நீதி சட்டத்திலும் இந்த குற்றங்களை தண்டனைக்கு உரியதாக சேர்க்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா மீது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று இந்த மசோதாக்கள் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.








