தமிழகத்தில் பிஎட், எம்எட் தேர்வுகள் கடந்த மாதம்
30ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய
இடங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருகின்றன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக்கலைக் கல்லூரியில் 1,150 பேர் தேர்வு
எழுதினர். இத்தேர்வு மையத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
செய்துகொடுக்கப்பட்டுள்ளதா என்றும், அவர்களுடன் வந்த உறவினர்களுக்கு
ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு
பின்னர் அவர் கூறியது: தமிழகம் முழுவதும் 670 கல்லூரியைச் சேர்ந்த 25
ஆயிரம் பேர் பிஎட், எம்எட் தேர்வை எழுது கிறார்கள். தேர்வு எழுதுவதற்காக
102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு
தேர்வு மையங் கள் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் 8
பேர் கொண்ட பறக்கும்படை குழுவினர் ஆய்வு செய்து முறைகேட்டினை தடுப்பார்கள்.
மேலும் துணைவேந் தர், பதிவாளர் உள்ளிட்டோரும் தேர்வு மையங் களுக்கு நேரில்
சென்று ஆய்வு செய்கின்றனர். தற் போது பிட், எம்எட் சேர்க்கைக்கு கூடுதல்
கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. இந்த கல்வியாண் டில் கூடுதல்
கட்டணம் வசூலிக்கும் பிட், எம்எட் கல்லூரிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். உரிம மும் ரத்து செய்யப்படும்.







