Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எட்டா கனியாகும் பட்டா மாற்றம-விழுப்புரம் மாவட்டம்(தினகரன்):
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்ய
வரும் பொதுமக்களை அதிகாரிகள் அலைகழிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல்
ஆயிரக்கணக்கான மனுக்களை நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம்
முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பத்திர பதிவு அலுவலகத்தில்
முறையாக நகர ஊரமைப்புத்துறையில் அங்கீகாரம் பெற்றும், சம்பந்தப்பட்ட
நகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகளில் அங்கீகாரம் பெற்று வீட்டுமனைகள்,
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் பதிவு செய்யப்பட்டது.
இதனால்
அரசுக்கு சொத்துமதிப்பில் 8 சதவிகிதமும், பத்திர பதிவு கட்டணம் 1
சதவிகிதமும், உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்வதற்குண்டான கட்டணமும்
பத்திரபதிவு அலுவலகத்திலேயே செலுத்தப்பட்டு வந்தது. இதனால் அரசுக்கு
பத்திரபதிவின் மூலம் பலகோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது.
இந்த
நிலையில் அரசு 210 என்ற அரசாணையின் படி நகர ஊரமைப்புத்துறையில் முறையாக
அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய
வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு
போடப்பட்டுள்ளது. இதனால் நிளஅளவைத்துறையில் உட்பிரிவு செய்து பட்டா மாற்றம்
செய்ய கோரும் மனுக்கள் நிள அளவைத்துறை கணக்கில் பணம் செலுத்தப்பட்டு
ஆயிரக்கணக்கில் மனுக்கள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை
இப்படி ஒரு கிடுக்கிபிடி போட்ட விபரம் இன்னும் பலருக்கு தெரியாமலே உள்ளது.
இருந்த போதிலும் தினம் தினம் அந்தந்த பத்திர பதிவு அலுவலகத்தில்
அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பிரிவுகளில் இருந்து வீட்டுமனைகளின் பத்திர
பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருவாய்த்துறையில் பட்டா மாற்றம்
செய்வதற்கு கிடுக்கிப்பிடி போட்டது போல் பத்திர பதிவு அலுவலகத்திலும்
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் கண்டிப்பாக பதிவு செய்ய முடியாது என்று
பொதுமக்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டிருக்க
வேண்டும்.
ஆனால் இதுபோன்று ஒரு அறிவிப்பு
வெளியிட்டால் பத்திர பதிவு பாதியில் பாதிப்பு ஏற்பட்டு அதன்மூலம் தினசரி
கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அங்கீகாரம் இல்லாத
வீட்டுமனைகளையும் பதிவு செய்கின்றனர்.
ஆனால்
இப்படி பத்திரம் பதியப்பட்ட பிறகு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய
வருவாய்த்துறையை அணுகும் போது தான் 210 அரசாணை இருப்பதை அவர்களுக்கு
வருவாய்த்துறையினர் உணர்த்துகின்றனர்.
விழுப்புரம்
மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் 210 அரசாணை அமலில் இருந்தாலும் அவசர
அத்தியாவசியம் கருதி அந்தந்த வட்டாட்சியர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்தை பயன்படுத்தி அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளுக்கு உட்பிரிவு
செய்து பட்டா மாற்றம் செய்து கொடுக்கின்றனர். ஆனால் விழுப்புரம்
மாவட்டத்தில் மட்டும் எதற்கெடுத்தாலும் அரசாணை அங்கீகாரம் இல்லாத
வீட்டுமனைப் பிரிவுகளில் 210ன்படி உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய
முடியாது என்று திட்டவட்டமாக கூறி பொதுமக்களை அலைகழிக்கும் நோக்குடன்
திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
உட்பிரிவு
செய்து பட்டா மாற்றம் செய்வதற்கு பத்திர பதிவு அலுவலகத்தில் ஒரு கட்டணம்,
நிலஅளவைத்துறையில் ஒரு கட்டணம் என்று செலுத்தி விண்ணப்பிக்கும் போது ஆயிரக்
கணக்கிலான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவது மட்டுமல்லாமல்,
திருப்பியும் அனுப்பப் படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும்
பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அவசர
அத்தியாவசியம் கருதி கடன் வாங்குவதற்கு கூட உட்பிரிவு செய்து பட்டா மாற்றம்
செய்ய அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றனர். வருவாய்த்துறையில் போடும்
கிடுக்கிபிடியை பத்திர பதிவு துறையில் அமல்படுத்தினாலே இதுபோன்று தவறுகள்
நடக்காமல் இருக்கும். அதை தவிர்த்து ஒருபக்கம் வருவாயை பார்த்து விட்டு
மற்றொரு பக்கம் பொதுமக்களை பட்டா மாற்றம் செய்வதற்கு வருவாய்த்துறையினர்
அலைகழிக்க விடுகின்றனர்.
எனவே விழுப்புரம்
மாவட்டத்தில் வருவாய்த்துறையில் உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய
கோரும் மனுக்களை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அங்கீகாரம் பெறாத
மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கு பத்திர
பதிவு செய்ய கூடாது என்று பொதுமக்களின் ஏமாற்றங்களை தவிர்க்க பத்திர பதிவு
அலுவலகங்களுக்கு சிறப்பு ஆணை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








