பிஇ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்
கல்வித்துறை அமைச் சர் பழனியப்பன் இன்று வெளியிடுகிறார். இதைதொடர்ந்து
வருகிற 27ம் தேதி பொது பிரிவு கவுன்சலிங் தொடங்குகிறது.
தமிழகத்தில்
உள்ள 570 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீடு
இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 2 லட்சத்து 12,374 விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் 1 லட்சத்து 73,687 மாணவர்கள் மட்டுமே
ஆர்முடன் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த
விண்ணப்பங்களுக்கு 10 இலக்கங்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11ம் தேதி
வெளியிடப்பட்டது. இன்று, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான
தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப்பட்டியலை உயர்
கல்வித்துறை அமைச் சர் பழனியப்பன் இன்று காலை 9.30 மணியளவில் அண்ணா பல்கலை
வளாகத்தில் வெளியிடுகிறார். இதையடுத்து விளை யாட்டு வீரர்களுக்கான
கவுன்சலிங் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். 25ம் தேதி மாற்று
திறனாளிகளுக்கான கவுன்சலிங், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூன்
27ல் தொடங்கி ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை20ம் தேதி வரை நடக்கிறது.







