தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
சேலம்
மாவட்டம் வீரபாண்டி, ஓமலூர் மற்றும் ஜலகண்டாபுரம், திருப்பூர் கணியூர்,
உடுமலைப்பேட்டை, கோவில்பட்டி, கொம்மடிக்கோட்டை, விருதுநகர் சேத்தூர்,
திருத்தங்கல். திருச்சி தாத்தையங்கார்பேட்டை, பெரம்பலூர் வேப்பந்தட்டை,
நாகப்பட்டினம் திருப்பூண்டி, கரூர் நங்கவரம், நாமக்கல் பரமத்தி வேலூர்,
குமாரபாளையம். திருவண்ணாமலை வெம்பாக்கம். திருநெல்வேலி வள்ளியூர்,
விழுப்புரம் வடக்கனந்தல் ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங் களுக்கு ரூ.9.20
கோடி யில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங் கச் சான்று
விவரங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வை யிடும்
வகையில் ரூ.58 லட் சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியையும் முதல்வர்
ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
இணையதளத்தில் எப்படி பார்வையிடுவது?
வில்லங்க சான்று விவரங்களை பொதுமக்கள் பார்வையிட, முதலில் தமிழக அரசின் பதிவுத்துறையின் இணையதளமான
ஷ்ஷ்ஷ்.tஸீக்ஷீமீரீவீஸீமீt.நீஷீனீ
க்கு
செல்ல வேண்டும். இணையதளத்தின் இடதுபுறத்தில் �வியூ ஈசி� என்ற ஆப்சன்
இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்தவுடன் எந்த
ஏரியாவில் டாக்குமென்ட் உள்ளது, சான்றிதழ் பதிவு செய்த நாள் போன்ற
விவரங்கள் கேட்கப்படும். அதில் சரியான விவரங்களை டைப் செய்ய வேண்டும்.
பின்னர், அதில் கேட்கப்படும் குறியிட்டினை டைப் செய்தால் போதும். சிறிது
நேரத்தில் விவரங்களை எந்தவித கட்டணமின்றி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.







