விருதுநகரில்
நாளை மறுநாள் (15-ந் தேதி) கல்வித் திருவிழாவாக நடைபெறும் காமராஜர்
பிறந்ததின விழாவில் சாதனை மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசு
வழங்கப்படுகிறது. விழாவில், குடும்பம் குடும்பமாக அணி திரண்டு வந்து
பங்கேற்க வேண்டும் என்று நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளர்
ஜி.கரிக்கோல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விழா தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கல்வித்திருவிழாபெருந்தலைவர்
காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் விருதுநகரில் உள்ள அவரது
இல்லத்தில் கல்வித் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு
காமராஜரின் 112-வது பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (15-ந் தேதி) காலை முதல்
மாலை வரை நடக்க உள்ளது. தமிழகத்தில் தனது ஆட்சிக்காலத்தை பொற்காலமாக
மாற்றி கல்விக் கண் திறந்த காமராஜரை கவுரவிக்கும் வகையில் இந்த
நிகழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக சமுதாய மக்கள் அணிதிரண்டு வந்து கலந்து
கொள்ள வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி விவரம்அன்றைய தினம் காலை 9
மணி அளவில் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை காணிக்கையாக வைத்து காமராஜர்
சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. நிகழ்ச்சியை காளீஸ்வரி குழும
இயக்குநரும், மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவருமான ஏ.பி.செல்வராஜன்
தொடங்கிவைக்கிறார். காலை 10.15 மணிக்கு அய்யாவழி மக்கள் இயக்கத்
தலைவர் பாலபிரஜாபதி குத்துவிளக்கேற்றி வைக்கிறார். வெள்ளைச்சாமி நாடார்
கல்லூரி செயலாளர் ஏ.டி.பி. போஸ் தொடக்க உரையாற்றுகிறார்.காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். சாதனை மாணவிகளுக்கு பரிசுமாலை
3 மணியளவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில்
முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ‘தமிழர் தந்தை’
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் மொத்தம் ரூ.14 லட்சத்து 29 ஆயிரம்
பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாநில அளவில் முதல் மூன்று
இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கையொப்பமிட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள
அட்டையுடன் வந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.இதுகுறித்த விரிவான விவரங்களுக்கு 99444 15211, 94861 62942 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.ஒவ்வொரு
ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ‘தமிழர்தந்தை’
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி
ஆதித்தனார் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார். இதை பின்பற்றி அவருடைய
மகனும், தினத்தந்தி இயக்குநருமான சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனும் பரிசு
வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு ரூ.14 லட்சத்து 13 ஆயிரமும், இந்த ஆண்டு
ரூ.14 லட்சத்து 29 ஆயிரமும் வழங்கி உள்ளார்.தங்கும் வசதிகல்வித்திருவிழாவில்
கலந்துகொள்வதற்காக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக
ஏ.எஸ்.ஏ.ஆறுமுகம் திருமண மண்டபம், வெற்றி நாடார் திருமண மண்டபம்,
தங்கச்சியம்மாள் திருமண மண்டபம் ஆகிய மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் நகராட்சி அலுவலக எதிர்புறம் உள்ள பெரியபேட்டை மைதானத்தில் மதிய
உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை நாடார் மகாஜன
சங்கம், சென்னை வாழ் நாடார் சங்கம், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை
(சென்னை), தமிழ்நாடு நாடார் பேரவை, குமரி மாவட்ட நாடார் சங்கங்கள், நெல்லை
நாடார் உறவின்முறை சங்கம், உறவின் முறை மற்றும் கிளை சங்கங்கள், நாடார்
மகளிர் மன்றங்கள், பாண்டியனார் தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் செய்துள்ளன.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விருதுநகரில் நாளை மறுநாள் கல்வித் திருவிழா: சாதனை மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசு:
விருதுநகரில் நாளை மறுநாள் கல்வித் திருவிழா: சாதனை மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







