கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில்
செல்போன் பயன்படுத் தக் கூடாது. செல்போன் காரணமாகவே பள்ளி, கல்லூரிகளில்
பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.போலீஸ்
நிலையங்களில் 20 சதவீதம் பெண்கள் நியமிக்க வேண்டும் மற்றும் தனி கழிவறை
வசதிகள் அவசியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கர்நாடக சட்டசபை கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த
அறிக்கையால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது
தொடர்பாக முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், “கமிட்டி அறிக்கையை
இன்னும் படிக்கவில்லை. எனவே, அறிக்கை தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க
முடியவில்லை. பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள்
எடுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களை பயன்படுத்துவதை தடை
செய்வதால் மட்டும் மனமாற்றம் நடந்து விடாது” என்றார்.
இது
போல் அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறுகையில், “செல்போன் பயன்படுத்துவதால்
பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை ஏற்க முடியாது.
ஆனாலும், பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு எந்தெந்த இடத்தில் பயன்படுத்த
தடை செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து, தடை விதிக்கப்படும்” என்றார். ஆனால்,
மாநில கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகருக்கு எதிராக மத்திய ரசாயன
உரத்துறை அமைச்சர் அனந்த் குமார் கருத்து தெரிவித்துள்ளார். “பள்ளி,
கல்லூரிகளில் செல்போன்கள் தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.







