விருதுநகரில் கல்வித்திருவிழா: மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசு வழங்கப்பட்டது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விருதுநகரில் கல்வித்திருவிழா: மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசு வழங்கப்பட்டது:

விருதுநகரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி நடந்த கல்வித்திருவிழாவில் பிளஸ்-2, 10-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.14¼ லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன.கல்வித்திருவிழாகாமராஜரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் விருதுநகரில் கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அவரது 112-வது பிறந்தநாள்விழா நேற்று கல்வித்திருவிழாவாக நாடார் மகாஜன சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜர் நினைவில்லம் அருகில், காலை 9 மணியளவில், ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவரும், காளீசுவரி குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான ஏ.பி.செல்வராஜன் கல்வித்திருவிழாவை தொடங்கிவைத்தார்.
அய்யா வழி மக்கள் இயக்கத்தின் தலைவர் பாலபிரஜாபதி அடிகள் குத்துவிளக்கு ஏற்றினார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயலாளர் ஏ.டி.பி.போஸ் தொடக்க உரை ஆற்றினார். தொடர்ந்து, சி.பா. ஆதித்தனார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பிளஸ்-2, 10-ம் வகுப்புகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பெற்ற 508 மாணவ-மாணவிகளுக்கு ரூ.14.30 லட்சம் மதிப்பிலான காசோலைகளும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக் குநர் டாக்டர் புகழகிரி வடமலையான் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-டாக்டர் புகழகிரிகாமராஜர் மிகப்பெரும் மனிதர். அவரை என்னுடைய 4 வயதில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்றளவும் மகிழ்ச்சியை தருகிறது. உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க என்ன வழி என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கர்மவீரர், அவர். மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பின்னாளில் வேலை தேடுபவராக இல்லாமல் 100 பேருக்கு வேலை அளிப்பவராக வளருவது முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.கரிக்கோல்ராஜ்நாடார் மகாஜன சங்கப் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பேசியதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக காமராஜரின் பிறந்தநாள் கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா காங்கிரஸ்காரர்கள் எடுக்க வேண்டிய விழா. அவர்கள் காமராஜரையும், அவர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் ஆற்றிய பணிகளையும் மறந்துவிட்டனர். நாமும் அவரை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விழாவை 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். நம்முடைய சமுதாயம் சத்திரிய வம்சத்தை சேர்ந்தது. தற்போது வணிகர்களாக இருக்கிறோம். நாடார் சமுதாயத்தினரால் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட பள்ளிகளில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 10 சதவீத மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 90 சதவீதம் பேர் மற்ற சமுதாயத்தினர் தான்.அடுத்த 5 ஆண்டுகளில் நாம் அரசியலில் தலைமை பீடத்தை பெற வேண்டும். அதற்காக இன்று முதல் தொகுதிக்கு 10 இளைஞர்களைக் கொண்டு தீவிரமாக செயல்படத் தொடங்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழருவி மணியன்சிறப்பு விருந்தினராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-காமராஜர் பற்றி கண்ணதாசன் மூலமாகவே நான் அறிந்தேன். அவரது செயல்பாடுகளையும், சாதனைகளையும் தெரிந்துகொண்டேன். அன்று முதல் இன்று வரை அவரது வாழ்வியலையே தொடருகிறேன். அவரது பண்பாட்டு வழியிலா நாடு செல்கிறது? நம்மில் எத்தனை பேர் அவரை பின்பற்றுகிறோம். காமராஜர் தன்னலம் கருதாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்த சமூக விஞ்ஞானி. மக்களின் வாழ்வாதாரம் உயர கல்வியை கொடுத்தார். படித்த பின்பு வேலைக்காக தொழிற்கூடங்களை அமைத்தார். உணவுக்காக விவசாயத்தையும், அணைகளையும் உருவாக்கினார். அவரது பிறந்தநாளான இன்று அகண்ட பாதையில் பயணிக்க உறுதிமொழி ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்கத்தலைவர் முத்துசாமி, பொருளாளர் நல்லதம்பி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை துணைத்தலைவர் பெரீஸ்மகேந்திரவேல், பொருளாளர் சேர்மபாண்டியன், பழவிளை காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி பேரவை துணைத்தலைவர் உதயகுமார், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சந்திரமோகன், முருகன் ஐ.ஏ.எஸ்., ஆனந்தகுமார், ஜெயகுமார், வி.கே.வி.பாலகுரு, ஈரோடு மாரியப்பன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து நாடார் மகாஜன சங்கத்தின் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, விருதுநகர் காமராஜர் நினைவில்லத்தில் உள்ள அவரது சிலைக்கு காலையில் இருந்தே ஏராளமான பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் புத்தகங்களை காணிக்கையாக செலுத்தி வணங்கினார்கள். அவ்வாறு செலுத்தப்பட்ட நோட்டுப்புத்தகங்கள் மலை போல் குவிந்தன.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H