பல்வேறு
காரணங்களால் 2011-13-ம் ஆண்டில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க
தவறியவர்கள், மீண்டும் பதிவு மூப்பை அடையும் வகையில், 2014-15-ம் ஆண்டில்
சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர்
ப.மோகன் அறிவித்துள்ளார்.மானியக்கோரிக்கைதமிழக சட்டசபையில்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழிலாளர்,
வேலை வாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கைகளை அந்த துறைகளின் அமைச்சர்
ப.மோகன் தாக்கல் செய்தார். இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்
எம்.எல்.ஏ.க்கள் பலர் வாதிட்டனர்.
இந்த வாதங்களுக்கு அமைச்சர் ப.மோகன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-அமைப்புசாரா தொழிலாளர்கள்அமைப்புசாரா
தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், தங்கள் பதிவை
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதில் பலர் தவறுவதால்,
உறுப்பினர் பதிவு மற்றும் பணப்பயன்களை இழக்க நேரிடுகிறது.இதைத்
தடுக்கும் வகையில் 2014-15-ம் ஆண்டில் பதிவு புதுப்பித்தலில் ஏற்படும்
சிரமங்களைத் தடுப்பதற்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக
உயர்த்தப்படுகிறது.
இதன்மூலம் 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ளவர்கள்
பயனடைவர்.புதிய வகை கட்டுமானங்கள்புதியரக கட்டுமானத்
தொழிலினங்கள் உருவாகி இருப்பதால், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத்
தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தின் அட்டவணையில் உள்ள
38 வகை தொழில் இனங்களுடன், மேலும் 15 கட்டுமான தொழிலினங்கள்
சேர்க்கப்படும்.தொழிலாளர் நலச்சட்ட விதிகளை மீறும் தொழிற்சாலைகள்
மீது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களால் தொடரப்படும்
வழக்குகளை விரைவாக திறம்பட நடத்தி முடிப்பதற்காக, 2014-15-ம் ஆண்டில்
இரண்டு சிறப்பு அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.சிறப்பு புதுப்பித்தல் சலுகை2011,
2012, 2013-ம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால்
புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், தங்களின் பதிவு மூப்பை மீளப் பெறவும்,
அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில், 2014-15ம் ஆண்டில்
சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் ஒரு லட்சம் பதிவாளர்கள்
பயன்பெறுவார்கள்.திறன்பெற்ற மனித ஆற்றலை உருவாக்கும் நோக்கத்தில்,
வேலைவாய்ப்பு அதிகமுள்ள வெல்டர், எலக்ட்ரீஷியன், வயர்மேன், ஏசி மெக்கானிக்
போன்ற தொழில் பிரிவுகள், 12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக
ரூ.10.86 கோடி செலவில் கூடுதலாக தொடங்கப்படும்.வயது உச்சவரம்புநாகர்கோவில்,
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காதுகேளாதோர், வாய்பேச
இயலாதோர் ஆகியோருக்காக புதிதாக பொருத்துனர் (பிட்டர்) தொழிற்பிரிவு ரூ.1.6
கோடி செலவில் தொடங்கப்படும்.2014-15ம் ஆண்டு முதல் தொழிற்பள்ளிகளில்
தொழிற்கல்வி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு,
தொழிற்பள்ளிகளில் நடத்தப்படும் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில்
மாணவர் சேர்க்கைக்கான வயது உச்சவரம்பு 40-ல் இருந்து 50 ஆக
உயர்த்தப்படுகிறது.மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும்
பெண்களுக்கு வயது உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதுபோல, 2014-15-ம் ஆண்டு
முதல், பொது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மகளிருக்கான
வயது உச்சவரம்பும் நீக்கப்படும்.தொழிற்பேட்டையில் வசதிகள்கடலூர்
மாவட்டம் பெரியநெசலூரில் அமையவுள்ள புதிய தொழிற்பேட்டையின் சாலை,
குடிநீர், கால்வாய், தெருவிளக்கு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், ரூ.12.5
கோடி செலவில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியின்
சாத்தூர், சிவகாசி மற்றும் அம்பத்தூர் கிளைகளுக்கு தலா ரூ.30 லட்சம்
செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும். தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில்
வெண்கல பொருட்கள் தயாரிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.10 லட்சம்
செலவில் தொழிற்கூடம் அமைக்கப்படும்.மதுரை மாவட்டம் கப்பலூர் மற்றும்
கோவை மாவட்டம் குறிச்சி ஆகிய இரண்டு அரசு தொழிற்பேட்டைகளிலும் தலா ரூ.12.5
லட்சம் செலவில் முதலுதவி மையம், மருந்தகம் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் மோகன் அறிவித்தார்.