வேலைவாய்ப்பக வெப்சைட்டில் குறைகளை தெரிவிக்க தனி வசதி செய்யவேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட் டம், பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:நான்
எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவன். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இருந்தபோதும் 18.5.1989ல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தேன்.
ஆனால் நான் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி
பெற்றதாக அதிகாரிகள் தவறுத லாக பதிவு செய்து விட்டனர். இதனால் எஸ்எஸ்எல்சி
தேர்ச்சி பெறாதவர்களுக்கான பிரிவின் கீழ் எனக்கு வேலைவாய்ப்பு
கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு பின் படித்து தேர்ச்சி பெறாத பலரும் அரசு
வேலையில் உள்ளனர். கலெக்டர் மற்றும் வேலைவாய்ப்பக அதிகாரிகளிடம் முறை
யிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக
ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளை யில் ரிட் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை
பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் எனக்கு பணி
வழங்கவில்லை. தமிழக அரசின் 17.7.2006ம் தேதி அரசாணைப்படி வேலைவாய்ப்
புக்கு 5 ஆண்டு வயது வரம்பு தளர்த்தி அறிவித்துள்ளது. என்னுடைய குறைகளை
அதிகாரிகள் சரி செய்யவில்லை. எனவே எனக்கு வேலை வழங்க அதிகாரிகளுக்கு
உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில்
கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர் தரப்பில், �பதிவு செய்ததில் தவறு நடந்துள்ளது.
மனுதாரருக்கு அதிக வயதாகிவிட்டது. 2008ம் ஆண்டில் வேலை வாய்ப்பிற்கான வயதை
மனுதாரர் கடந்து விட்டார்� என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி
பிறப்பித்த உத்தரவில், ��வேலை வாய்ப்பக தரப்பின் வாதத்தை ஏற்கமுடியாது.
தவறு அவர்களுடையது. இதற்காக மனுதாரரை பலிகடா ஆக்கக்கூ டாது. பிசி மற்றும்
எம்பிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாணைப்படி வயது வரம்பு
உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த காலத்தில் வேலை நியமன தடை சட்டம்
இருந்தது. இதனால் மனுதாரரால் வேலை வாய்ப்பை பெற முடியவில்லை.
கேட்காத
காதுகளில் இவரது கோரிக்கை கூறப்பட்டுள் ளது. எனவே வேலை வழங்க முடியாது
என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களில்
விபரங் களை சேகரித்து அதில் ஏதா வது ஒன்றில் மனுதாரரை நியமிக்க 6
வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும்.
ஐகோர்ட் கிளை உத்தரவு
கேட்காத
காதுகளில் இவரது கோரிக்கை கூறப்பட்டுள் ளது. எனவே வேலை வழங்க முடியாது
என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களில்
விபரங் களை சேகரித்து அதில் ஏதா வது ஒன்றில் மனுதாரரை நியமிக்க 6
வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும்.
இது போன்ற காரணத்திற்காக நீதிமன்றத்திற்கு வழக்குகள் வருவதை தவிர்க்கும் விதமாக வேலைவாய்ப்புத்துறை
ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீu.ரீஷீஸ்.வீஸீ
என்ற தனது இணையதளத்தில் பதிவுதாரர்களின் குறைகளை கேட்டு சரிசெய்திட தனி பிரிவை துவக்க வேண்டும்.
அதன்பின் குறிப்பிடப்படும் குறைகளை சரிசெய்து ஒரு மாதத்திற்குள் கணிணி மூலம் பதிவு அட்டை வழங்கவேண்டும்,” என உத்தரவிட்டார்.