தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில்
தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு
முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி
பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
இந்த
ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு
சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிட்டன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வுகள்
இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 23ம் தேதி ஜூனியர்
இளநிலை தேர்வும், 24ம் தேதி சீனியர் தேர்வு, உயர்வேகம் உள்ளிட்ட தேர்வுகள்
நடைபெற உள்ளன.







