தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக்
கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு ரூ.1 கோடி வாங்கப்படுகிறது. எனவே,
கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம்
நிர்ணயிக்க புதிய கமிட்டி நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்
நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
தமிழகம்
முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு அமைத்த கமிட்டி, ஒவ்வொரு தனியார்
மருத்துவக் கல்லூரியிலும், ஒவ்வொரு மாணவனிடமும் கல்லூரி கட்டணமாக
ரூ.2லட்சத்து 80ஆயிரம் தான் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயித்தது.
ஆனால்
தனியார் கல்லூரிகள் அதிகமான அளவு கட்டணம் வசூலிக்கின்றன. தனியார்
கல்லூரியின் இந்த கட்டண வசூலை தடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய
அரசின் இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் இணைந்து புதிய கமிட்டி
அமைக்கவேண்டும் என்று கோரி மத்திய, மாநில அரசுக்கு மனு கொடுத்து எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உயர்
நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும். மருத்துவக் கல்லூரிகள்,
எம்பிபிஎஸ் இடங்களை ரூ. 1 கோடி அளவுக்கு விற்பனை செய்கிறார்கள். நன்கொடை
என்ற பெயரில் கட்டணம் தனியா வசூலிக்கிறார்கள். இதுதவிர கல்வி கட்டணமாக ரூ.1
கோடியும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எந்த விதிமுறையும் பின்பற்றுவது
இல்லை. அரசு அமைத்த கமிட்டியும் இதை கட்டுப்படுத்துவது இல்லை. அதை
கண்காணிப்பதும் இல்லை.
இதனால் சுயநிதி
மருத்துவக் கல்லூரிகள், நிர்வாக இடங்களில் இஷ்டப்படி கட்டணம்
வசூலிக்கிறார்கள். சிலர் கருப்பு பணத்தை பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்று
சட்ட ரீதியாக பணமாக்கிவிடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் பல முறை
உத்தரவிட்டும் சுயநிதிக் கல்லூரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநில அரசு
இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. மருத்துவக் கல்லூரிகள் நன்கொடை வசூலிக்க
கூடாது என்று தடை விதித்தும், அதை கல்லூரிகளி கண்டுகொள்வது இல்லை. சுயநிதி
கல்லூரிகளின் நோக்கமே பணம் சம்பாதிப்பது தான். இதை அனுமதித்தால் நல்ல
டாக்டர்கள் சமுதாயத்தில் உருவாக மாட்டார்கள். தற்போதைய நிலை நீடித்தால் ஏழை
மாணவர்களினால் மருத்துவ கல்வி படிக்க முடியாது.
நுழைவு
தேர்வு என்பது கண்துடைப்பு ஆக மாறிவிட்டது. இதற்கு அரசு உடந்தையாக உள்ளது.
கல்லூரிகள் லாப நோக்கத்துடன் தான் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை
மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய
கமிட்டியை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர்
கூறியிருந்தார்.
இந்த வழக்கு தற்காலிக
தலைமை நீதிபதி அக்னி கோத்ரே, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன் நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் சத்தியசந்திரன்
ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் கூடுதல் அரசு பளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகி
பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு 4 வாரத்தில்
அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதேபோல�
வேலூரை சேர்ந்த ரமேஷ் குமார் ராஜன் என்பவர் தனியாக சென்னை உயர்
நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அண்ணாமலை மருத்துவ
பல்கலைக் கழகத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதற்கு தடை
விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்”
என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி
சத்தியநாராயணன் விசாரித்து, தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க
உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல். கே.பாலு ஆஜராகி
வாதாடினார்.







