தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் நிறுவனராக இருப்பவர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடம் தமிழக அரசு பணியில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை கொண்டு நிரப்பவேண்டிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இந்தப் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.உயர் நிலைக்குழு இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.விஜேந்திரன், ஜி.சரவணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தமிழக அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது.அதில், ‘‘அரசின் அனைத்துத் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில், அந்தப் பிரிவினர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக உயர்நிலைக்குழு ஒன்றினை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ததும், அந்த பணியிடங்களை நிரப்ப தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.நிரப்பவேண்டும்இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பின்னடைவுப் காலிப் பணியிடங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட உயர் நிலைக்குழு அறிக்கையை அரசு பெற்றவுடன் அது தொடர்பான தகுந்த உத்தரவினை பிறப்பித்து காலிப்பணியிடங்களைநிரப்பவேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H