தமிழகத்தில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் 2
லட்சத்து 5,463 இடங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு
இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். விளையாட்டு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான
கவுன்சலிங் முடிந்து, பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் கடந்த 27ம்
தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களும் அண்ணா பல்கலைக்
கழகத்திற்கு வந்தனர். ஆனால், திடீரென கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது.
28 நாள் தொடர்ந்து நடக்கிறது
தமிழகத்தில்
உள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 5,463 இடங்கள் உள்ளன. இதில், 1
லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்
நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விளையாட்டு
ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சலிங் முடிந்து, பொது பிரிவு
மாணவர்களுக்கான கவுன்சலிங் கடந்த 27ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு
இருந்தது. மாணவர்களும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வந்தனர். ஆனால், திடீரென
கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது.
காரணம்,
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில்(ஏஐசிடிஇ), உச்ச நீதிமன்றத்தில் ஒரு
மனு தாக்கல் செய்தது. அதில், 529 புதிய பொறியியல் கல்லூரிகளின்
விண்ணப்பங்களை பரிசீலிக்க கால அவகாசம் கோரியது. இதை விசாரித்த உச்ச
நீதிமன்றம், விண்ணப்பங்களை பரிசீலிக்க கவுன்சிலுக்கு 7 நாட்கள் அவகாசம்
அளித்தது. புதிய கல்லூரிகளையும் கவுன்சலிங்கில் சேர்க்க வசதியாக,
கவுன்சலிங்கை தள்ளி வைக்கவும் உத்தரவிட்டது. எனினும், முதல் கட்ட
கவுன்சலிங்கை ஜூலை 15ம் தேதிக்குள்ளும், 2ம் கட்ட கவுன்சலிங்கை ஜூலை 22ம்
தேதிக்குள்ளும், இறுதி கட்ட கவுன்சலிங் ஜூலை 29ம் தேதிக்குள்ளும் முடிக்க
வேண்டும். ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டுமென்றும் உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை
தொடர்ந்து கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக இருந்து பொறியியல் மாணவர் சேர்க்கை
பொது பிரிவு கவுன்சலிங் மறுதேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில்,
ஏஐசிடிஇ பொறியியல் கல்லூரிகள் குறித்து இறுதி பரிசீலனை செய்துள்ளதாகவும்,
எனவே பொறியியல் கவுன்சலிங் குறித்து பல்கலைக்கழகம் முடிவு எடுக்கலாம் என
அண்ணா பல்கலைக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப
கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர்
கணேசன், மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள்
தலைமையிலான பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று காலை
நடைபெற்றது. இதில், வரும் 7ம் தேதி முதல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான
பொதுபிரிவு கவுன்சலிங்கை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து
பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது:
பொதுபிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் வரும் 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம்
தேதி வரை 28 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து தகவல் அனைத்து மாணவர்களுக்கும்
எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரவரிசைபடி மாணவர்
சேர்க்கை குறித்த புதிய தகவல்கள் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கலந்தாய்வு
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 9 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. ஒரு நாளில் 5
ஆயிரத்து 500 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர்கள்,
பல்கலை இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும், பிறந்த
தேதியை பதிவு செய்து தங்களுக்கான கவுன்சலிங் தேதி மற்றும் நேரத்தை தெரிந்து
கொள்ளலாம். மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கலந்தாய்வு
நடைபெறும். ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.







