தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம்
முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு, மன அழுத்தமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல்
வெளியாகி உள்ளது.தமிழகத்தில் கடன்
தொல்லை, நோய், வேலையின்மை, கள்ளக்காதல், காதல் தோல்வி, பிரச்னைகளை சந்திக்க
முடியாத சூழல் போன்றவைகளால் தற்கொலைகள் அதிகம் நடக்கிறது. குறிப்பாக, மன
அழுத்தம், மன இறுக்கம் போன்றவை காரணமாகவே அதிகளவு தற்கொலை முயற்சி மற்றும்
தற்கொலைகள் நடக்கிறது. இதில், 14 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்குமே
அந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில்
மற்ற மாநிலங்களை காட்டிலும் கடந்த 2013ல் தமிழகத்தில் தான் 12.3 சதவிகிதம்
பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
மேலும், 1 மணி நேரத்திற்கு 15 பேர் மன ரீதியாக பாதிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.
இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உளவியல் துறை பேராசிரியர் யுவராஜ் கூறியதாவது:
மன
இறுக்கம் என்பது அனைவரிடமும் இருக்கும். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு
உணர்வு தான். இன்றைய காலகட்டத்தில் ஒருவனின் சுற்றுப்புற சூழ்நிலையே மன
அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. குறிப்பாக, ஏமாற்றம், இழப்பு
போன்றவை ஒருவனை இத்தகைய நிலைக்கு தள்ளி விடுகிறது. சமீபகாலமாக இளைஞர்கள்
பெரும்பாலானோர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த மதுவால்
மூளையில் உள்ள ரசாயணம் குறைந்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆரம்பகட்டத்தில் மன அழுத்தம் தொடர்பான சிகிச்சை மேற்கொண்டால்







