இந்தி மொழி படிக்காத தமிழகத்தில் உள்ள மத்திய
அரசு ஊழியர்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு �மெமோ� கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், இந்த
சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சட்டத்தின் பிடி இறுகுமானால், போராட்டத்தில் ஈடுபடவும் அதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள
மத்திய அரசு அலுவலகங்களில் 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களிடம்
இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
1957ம்
ஆண்டு பிரதமராக இருந்த நேரு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை
திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். அடுத்து வந்த லால் பகதூர்
சாஸ்திரியும் இதே உறுதிமொழியை அளித்தார். அதன் பிறகு மாநிலங்களில்
செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று
யாரும் நேரடியாக வற்புறுத்தவில்லை.
ஆனால்,
மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜ அரசு, இந்தி மொழி திணிப்பு
தீவிரமாகியுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் பணியாற்றும்
இந்தி மொழி படிக்காத மத்திய அரசு அலுவலர்கள் 11 பேருக்கு மெமோ
கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதிலை அவர்கள் அளித்தே ஆக வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். இச்சம்பவம், சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களின்
விளக்கம் ஏற்று கொள்ளாதபட்சத்தில் சம்பந்தபட்டவர்களை சஸ்பெண்ட் செய்யவோ
அல்லது டிஸ்மிஸ் செய்யவோ சட்டத்தில் இடமுள்ளது. அதாவது ஆட்சி மொழி சட்டம்
1963ல் பிரிவு 4.1, 4.2 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி, �மத்திய அரசு
அலுவலகங்களில் எந்த வேலைக்கு வந்தாலும் இந்தி மொழியை கட்டாயம் படித்தே ஆக
வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் கடமை தவறியர்கள் என்ற ரீதியில் அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கலாம்� என்று குறிப்பிடப்பட்டுள் ளது. இவ்வளவு நாள்
தூங்கிக் கொண்டிருந்த இந்த சட்டத்தை தூசு தட்டி எடுத்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில்
உள்ள மத்திய அரசு அலுவலக நிர்வாகத்தில் உள்ள ஆவணங்கள் பல தமிழிலும்,
ஆங்கிலத்திலும் உள்ளது. வரவு, செலவு கணக்குகளும் அப்படி இருக்கும் போது
இந்தி படிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பது மத்திய அரசு
அலுவலர்களின் குமுறலாக உள்ளது.
நடவடிக்கை
எடுப்பதற்கான சட்டம் இருப்பதால் தான் அவ்வப்போது இந்த பிரச்னை எழுகிறது.
எனவே இந்த சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும்,
அதை செய்யாவிட்டால் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபடவும் மத்திய அரசு
அலுவலர்கள் முடிவு செய்துள்ள னர்.
இதுகுறித்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் கூறியதாவது:
இந்தி மொழியை படிக்க பணி நேரத்தில் தனி பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது.
அதற்கான
தேர்வில் பாஸ் செய்தால் ஒரு இன்கிரிமென்ட் கூடுதலாக தருகின்றனர். பதவி
உயர்வு உத்தரவு, ஓய்வு பெறும் உத்தரவு போன்றவைகள் அனைத்தும் இப்போது
இந்தியில் தான் தருகின்றனர். அதில் கையெழுத்திடும் அதிகாரிகள் கூட
இந்தியில் தான் கையெழுத்திடுகின்றனர். அவர் யார் என்பதை கூட வாசிக்க
தெரியவில்லை.
மேல் அதிகாரிகளுக்கு அனுப்பக்
கூடிய கடிதங்கள் முதல் ஆவணங்களை இதுவரை ஆங்கிலத்தில் தான் அனுப்பி
வந்தோம். இப்போது இந்தியில் தான் அனுப்ப வேண்டும் என
கட்டாயப்படுத்துகின்றனர்.
இப்படியே
சென்றால் இந்தி மொழியை படித்தால் மட்டுமே இங்கு பணிபுரிய முடியும் என்ற
நிலை ஏற்படும். எனவே இதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி
போராட முடிவு செய்துள்ளோம். அதற்காக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.







