அரசாணை
எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம்
ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில்
ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி
என்ற விதி பொருந்தாத நிலையில்
3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல்
வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வள மைய
ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடரப்பட்ட
வழக்கு 24.06.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவும் இன்று காலை
தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர்
சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு
காலை 11.30மணியளவில் வந்தது.
விசாரணையில்
சங்கங்கள் வழக்கு தொடுக்க முடியாது
என கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் நாட உள்ளதாக வழக்கு
தொடுத்த தமிழ்நாடு
அனைத்து வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள்
முன்னேற்ற சங்க தலைவர் திரு.கே.சம்பத் தெரிவித்தார்.