Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு:
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு:
ஆதிதிராவிட,
பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற
மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி
பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர்
சுப்பிரமணியன் அறிவித்தார்.சாரணர் இயக்கம்தமிழக சட்டசபையில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான
எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் பதிலளித்து
பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தை சீரிய முறையில்
செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.1.14
கோடி செலவினம் மேற்கொள்ளப்படும்.
சோலார் விளக்குதமிழகத்தில்
உள்ள ஆயிரத்து 96 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின்
விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு
ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.இந்த துறையின் கீழ்
மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட
பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து 154 மாணவ,
மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ரூ.550 மதிப்புள்ள ஒரு சூரிய
எரிசக்தியுடன் கூடிய “சோலார்” விளக்கு வழங்கப்படும்.ஆயத்த பயிற்சிஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும்
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியரை கல்வி சுற்றுலா
அழைத்துச் செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம், 207 உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணம் அளிக்கப்படும்.பொறியியல் கல்லூரிகளில்
பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ,
மாணவியர்கள், ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. போன்ற
மேற்படிப்பில் சேர, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்து,
தகுதியின் அடிப்படையில் அந்த தேர்வை எழுதுவதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50
ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் ஆயத்த பயிற்சி அளிக்கப்படும்.முதலுதவி பெட்டிஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக
ஆயிரத்து 346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிட
பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவி பெட்டி வழங்கப்படும்.இந்த துறையின்
கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32
ஆயிரத்து 112 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களின் சுகாதார நலனை
பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு “நாப்கின் பர்னர்” என்ற சுகாதார
குட்டை தகளி வழங்கப்படும்.வட்டாட்சியர் அலுவலகம்நீலகிரி
மாவட்டத்தில் 32 ஆயிரத்து 813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட
தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகள் 40
கி.மீ. தொலைவில் உள்ளதால், அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை
எளிதில் சென்றடைய குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் தனி வட்டாட்சியர்
அலுவலகம் தோற்றுவிக்கப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான
விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.ஐ.ஏ.எஸ். தேர்வுஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆயிரத்து 397
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, 100
மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 107 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு
பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி
நிலையம் வாயிலாக யோகா பயிற்சி அளிக்கப்படும்.இந்திய குடிமைப்பணிகள்
மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி-1) முதனிலைத்
தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின தேர்வர்களுக்கு, முதன்மைத் தேர்வினை
எழுத ஆகும் இடைநிகழ் செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு தலா ரூ.50
ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை, மத்திய அரசின் பழங்குடியினர் துணைத்
திட்டத்திற்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.இவ்வாறு அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








