விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம்
வழங்கப்பட்டது.கல்லூரி டீன் டாக்டர்
உஷாசதாசிவன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விண்ணப்பத்தினை வழங்கினார். இது
குறித்து அவர் கூறுகையில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி
நர்சிங், ரேடியாலஜி, ரேடியோதெரபி டெக்னா லஜி, பி.பார்ம் உள்ளிட்ட
படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5
மணி வரை அலுவலகத்தில் வழங்கப்படும். 18ம் தேதி கடைசிநாள்.
விண்ணப்பம்
பெற விண்ணப்ப மனுவுடன் தி செகரட்டரி, செலக்ஷன் கமிட்டி கீழ்பாக்கம்,
சென்னை என்ற பெயரில் ரூ. 350க்கு, சென்னையில் மாற்றதக்க வகையில் தேசிய
மயமாக்கபட்ட வங்கியில் டிடி எடுத்து கொடுத்து பெறலாம். எஸ்சி, எஸ்டி
பிரிவினர் தங்களது ஜாதி சான்றிதழை அட்டஸ்ட் பெற்று அதனை கொடுத்து இலவசமாக
பெற்று கொள்ளலாம். டிடி கல்லூரி வளாகத்தில் பெறும் வசதியும் செய்து
தரப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதி மாலை 5
மணிக்குள் சென்னை அலுவலகத்துக்கு வந்து சேரும் படி அனுப்பி வைக்க வேண்
டும் என்றார். அப்போது மருத்துவ கண்காணிப் பாளர் டாக்டர் சரவணன், நிலைய
மருத் துவ அலுவலர் டாக்டர் மணிவண்ணன், நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி,
கண்காணிப்பாளர்கள் முருகவேல், சுஜாதா உடனிருந்தனர்.
18ம் தேதி கடைசி நாள்







