கடலூரில் டிஎன்பிஎஸ்சி குரூப்&2 ஏ தேர்வு
வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்
தேர்வெழுதியவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் புகார் மனுவும்
அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:
கடந்த
29ம்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்&2 ஏ
தேர்வு நடத்தப்பட்டதில் வினாத்தாள் வெளியானது ஆதாரத்துடன் கிடைத்துள்ளது.
இதுபோன்று 2011ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும்,
30.7.2011 அன்று நடைபெற்ற குரூப்&2 தேர்விலும் பல்வேறு முறைகேடுகள்
நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. 2012ம் ஆண்டு நடந்த குரூப்&2
தேர்வில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பு வெளியானதையடுத்து தேர்வு ரத்து
செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தேர்வுக்கு முன்பு வெளியாகியிருப்பதற்கான
ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இதில் முறையாக விசாரணை நடத்தி உண்மை
கண்டறியப்பட்டால் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வை நடத்த வேண்டும்.
இதுபோன்று
முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும். தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு விசாரணையை துரிதப்படுத்த
வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை விட்டுவிட்டு இரவு, பகல்
பாராமல் அரசுத்தேர்வை எழுதியுள்ளோம். ஆனால் வினாத்தாள் வெளியாவது எங்களை
போன்றவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இதுபோன்று
நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புகார்
மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடலூர்
மாவட்டத்தில் அரசு தேர்வாணைய வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஏற்கனவே
மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதில் முழுமையான நடவடிக்கை என்பது கிடப்பில்
உள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் அருகே சில கிராமங்களில்
பெரும்பான்மையானவர்கள் அரசு தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றி பெற்று
தற்போது பணியை மேற்கொள்ள இருப்பதால் வினாத்தாள் வெளியான விவகாரம்
சூடுபிடித்துள்ளது.







