கடலூர் மாவட்ட தொடக்க கல்வித்துறையில் போலி
கையெழுத்து மூலம் ரூ.14 லட்சம் தேர்வு கட்டணத்தில் முறைகேடு செய்த
கல்வித்துறை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடலூர்
மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர்
சந்திரசேகரன்(45). கடந்த 2012&13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக
ரூ.14,90,095 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில் ஈ&பார்ம் (மின்னணு
பதிவு) மூலம் மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்டது போன்று தேர்வு
கட்டணத்தில் முறைகேடு செய்து சந்திரசேகரன் சென்னை பள்ளி கல்வித்துறைக்கு
கணக்கு அணுப்பியுள்ளார். இதற்கிடையே கடலூர் மாவட்ட கருவூலத்துறை தங்கள்
கணக்கிற்கு வந்து சேரவேண்டிய கல்வித்துறையின் பணத்தொகை குறைந்துள்ளது
குறித்து சென்னை பள்ளி கல்வித்துறைக்கு விளக்கம் கேட்டது.
இது
தொடர்பாக கோப்புகளை சென்னை பள்ளிக் கல்வித்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அலுவலர் சந்திரசேகரன், போலியாக மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா
கையெழுத்திட்ட கணக்கை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் ரூ.14,90,095 முறைகேடு
செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது
தொடர்பான அறிக்கையின் பேரில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கருப்புசாமி,
கடலூர் கல்வி அலுவலக உதவி பிரிவு அலுவலர் சந்திரசேகரனை சஸ்பெண்ட் செய்து
உத்தரவிட்டார். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.







