ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் எஸ்.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட கருவூலங்கள்,
சார் கருவூலங்கள், ஓய்வூதியர் அலுவலகம், சென்னையில் ஓய்வூதியம் பெறும்
அனைவருக்கும் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை நேர்காணலில் கலந்துகொள்ள
வாய்ப்பளிக்கப்பட்டது.
தற்போது இவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் வரும் 20-ஆம் தேதி வரை இந்த நேர்காணல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய
மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள்
நேரில் சென்று விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கத் தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான ஓய்வூதியம்
நிறுத்தப்படும்.
நேரில் வர
முடியாதவர்கள் உரிய மருத்துவர், அரசிதழ் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம்
உரிய வாழ்வுச் சான்று அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.







