சிவில் சர்வீஸ் திறனறி தேர்வில் ஆங்கில அறிவை
சோதிக்கும் கேள்விகளுக்கான மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்ணில் (கிரேடு)
சேர்க்கப்படாது என மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங்
மக்களவையில் நேற்று அறிவித்தார்.ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேர்வு செய்ய நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில்
கடந்த 2011ம் ஆண்டு திறனறி தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில்
ஆங்கில புலமை சோதிக்கும் கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில்
படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் டெல்லியில் சமீபத்தில்
போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கனவே
ஒலித்தது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு
அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்பிரச்னை நாடாளுமன்றத்தில் நேற்று மீண்டும் எதிரொலித்தது.







