இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங்
நேற்றுடன் முடிவடைந்தது. இதில் சுமார் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்திற்கும்
இன்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவில்லை. இந்நிலையில் துணை கவுன்சலிங் நாளை
தொடங்குகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 534
பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து
4,072 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து
73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4
ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த
மாதம் 7ம் தேதி தொடங்கி நேற்றுவரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 1
லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில், 1 லட்சத்து 5
ஆயிரத்து 133 மாணவ, மாணவியர்கள் இடங்களை தேர்வு செய்தனர். 59,300
மாணவர்கள் பங்கேற்க வரவில்லை. 496 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு
செய்யவில்லை.
துணை கவுன்சலிங் நாளை தொடக்கம்
கடந்த
மாதம் 7ம் தேதி தொடங்கி நேற்றுவரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 1
லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில், 1 லட்சத்து 5
ஆயிரத்து 133 மாணவ, மாணவியர்கள் இடங்களை தேர்வு செய்தனர். 59,300
மாணவர்கள் பங்கேற்க வரவில்லை. 496 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு
செய்யவில்லை.
இந்தாண்டு பொறியியல் மாணவர்
சேர்க்கையை பொறுத்தளவில், பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் சுமார் 1
லட்சம் இடங்கள் நிரம்பவில்லை. இதனால் பல இன்ஜினியரிங் கல்லூரிகளை நிதி
சுமையின் காரணமாக இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷனில் 80 ஆயிரம் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில்,
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
6ம் தேதி கவுன்சலிங் நடைபெற உள்ளது. இதற்கு 5ம் தேதி பதிவு செய்ய வேண்டும்.
பொதுப் பிரிவில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களும், இந்த துணை
கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம்.
மேலும்,
பொதுப் பிரிவு கவுன்சலிங்கில் அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டில்
நிரப்பப்படாத இடங்களுக்கு 7ம் தேதி சிறப்பு கவுன்சலிங் நடத்தப்படுகிறது.







