அரசு கலை, அறிவியல்
கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முதல் கட்ட
நேர்காணலுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு கலை, அறிவியல்
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணல்
வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது. முதல் கட்டமாக, கணிதப் பாடத்தில்
விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். கணிதப்
பாடத்தில் பிற விண்ணப்பதாரர்களுக்கும், பிற பாடங்களுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கும் நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் விரைவில்
அனுப்பப்படும்.
இந்தக் கடிதங்களில்
நேர்காணலுக்கான நாள், இடம், நேரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த
அழைப்புக் கடிதங்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தையும்
பார்வையிட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.







