பெ.நா.பாளையம் : 'உலகளவில் வரும் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள்தேவை உள்ளது' என, குஜராத் மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை கமிஷனர் ஜெயந்தி பேசினார்.பெரியநாயக்கன்பாளையம்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தா பல்கலை 9வது
பட்டமளிப்பு விழா வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. பல்கலை
துணைவேந்தர் ஆத்மபிரியானந்தர் வரவேற்றார். பல்கலை தலைமை நிர்வாகி சுவாமி
அபிராமானந்தர் அறிமுக உரையாற்றினார்.விழாவில், சிறப்பு விருந்தினராக
பங்கேற்ற குஜராத் கமிஷனர் ஜெயந்தி பேசுகையில், 'யுனெஸ்கோ கணக்கீட்டின்படி,
உலகில் படிப்பறிவு இல்லாத 25 கோடி குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளிக்க
வரும் 2015ம் ஆண்டில் 52 லட்சம்ஆசிரியர்கள் தேவைப்படுவர் எனக் கூறியுள்ளது.
போதிக்கப்படும் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை கிரகித்துக் கொள்ளும்
ஆசிரியர்கள்தான் நாட்டுக்கு தேவை. ஆசிரியர் - மாணவர்கள் இடையே ஏற்படும்
புனிதமான உறவு கற்பித்தலில் புரட்சியை ஏற்படுத்தும்' என்றார்.
விழாவில் பல்கலை
வேந்தரும், ராமகிருஷ்ண மிஷனின் பொது செயலாளருமான சுவாமி சுகிதானந்தாஜி
மகராஜ் பேசினார். 222 பேருக்கு பட்டயம், பட்டங்கள் வழங்கப்பட்டன. பரமார்த்த
சைதன்யர், டீன்கள் முத்தையா, அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.