நண்பர்களே transfer பற்றிய சில விளக்கங்கள். IFHRMS இல் ஒரு பணியாளரை transfer செய்யும் பொழுது முன்னரெல்லாம் transfer entry & relieving entry கொடுத்ததும் பணியாளர் new office joining entry இல் வருவார் ஆனால் தற்பொழுது individual employee log in செய்து joining report கொடுத்தவுடன் new office சென்று joining entry போட வேண்டும்.
இவ்வாறு மாறுதல் பெறுபவர்களுக்கு transit period pay entry கொடுத்தால்தான் சம்பளம் முழு மாதத்திற்கும் வரும்.
உதாரணமாக feb 2 தேதி ஒருவர் மாறுதல் பெறுகிறார் எனில் transit period pay entry கொடுக்காமல் இருந்தால் 1 நாளைக்கு மட்டும் தான் சம்பளம் calculate ஆகும்.
**Transit pay period என்பது பணியேற்பிடைக்காலம். ஒருவருக்கு பணியேற்பிடைக்காலம் 5 நாட்கள். அவருக்கு பணியேற்பிடைக்காலம் yes or no எனக் கேட்கும். அதில் yes எனில் எந்த தேதியில் இருந்து எந்தத் தேதி வரை என கொடுத்து மூன்று level process செய்து result இல் mark for recalculation கொடுத்தால் amount சரியாக முழு மாதத்திற்கும் வரும்.
**
பழைய அலுவலகத்திலும் புதிய அலுவலகத்திலும் ஒரே கணக்கு தலைப்பு எனில் சம்பளம் பிரிந்து வராது. HRA மாறுபாடு எனில். HRA மட்டும் பிரிந்து வரும். சில கருவூலங்களில் பழைய அலுவலகத்திற்கும் புதிய அலுவலகத்திற்கும் சம்பளம் பிரிந்து வர வேண்டும் என வாதம் செய்கின்றனர் என சொல்கின்றனர் ஒரே கணக்கு தலைப்பு எனில் சம்பளம் பிரிந்து வராது. அதாவது பழைய அலுவலகத்தில் வேலை செய்த நாட்களுக்கும் புதிய அலுவலகத்தில் வேலை செய்த நாட்களுக்கும் பிரிந்து வராது.