ஆறகழுர்
அரசு மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏரி மற்றும் சாலைகளில்
மரக்கன்றுகளை நடலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் பொருட்டு ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பனை மர விதைகளை சேகரித்தனர். கடந்த இரண்டு
மாதத்தில் 5000 பனை விதைகளை சேகரிக்கப்பட்டு பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இம்
மரக்கன்றுகளை சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் உள்ள ஆறகழூர் மற்றம் தியாகனூர் ஏரிகளில்
உள்ள கரைகளில் இம்மரக்கன்றுகளை நடலாம் என்று திட்டமிடப்பட்டு இன்று 13.09.14 காலை 10.30
மணிக்கு தலைமையாசிரியர் திரு. ஆர். தேவராஜன் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் விழா
தொடங்கப்பட்டது. ஆறகழூர் பள்ளியிலிருந்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சாரணர்கள்,
JRC மற்றும் பள்ளியில் பயிலும்
மாணவ மாணவியர்கள் அனைவரும் ஆறகழூர் மற்றும் தியாகனூர் ஏரிகளுக்கு சென்று 5000 பனை மற்றும்
வேப்பம்மர விதைகள் ஏரியின் கரை மூழுவதும் நட்டனர்.
இந் நிகழ்ச்சியின் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரங்களை நட்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் தியாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியானது மாணவ மாணவியர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கையை பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியது.இவர்களின் முயர்ச்சிக்கு கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களின் பாராட்டுக்களை தயவு செய்து COMMENT BOXல் தெரிவிக்கலாமே!!!.