தொழிற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தகுதி வழங்காமல், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை என்ற புகார், நீண்ட காலமாக நீடிக்கிறது.பல ஆண்டுகளுக்கு முன், தொழிற்கல்வி துவங்கிய பள்ளிகளில் மட்டுமே, தற்போதும் தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது; கடந்த பல ஆண்டுகளில் துவங்கிய மேல்நிலைப்பள்ளிகளில், புதிதாக தொழிற்கல்வி கொண்டு வரவில்லை. ஏற்கனவே, தொழிற்கல்வி கற்பித்த சில பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறையால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், எவ்வித அறிவிப்பும் இன்றி நீக்கப்படுகிறது. பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றாலோ, பணி மாறுதலில் சென்றாலோ மீண்டும் அந்த பணியிடத்தில், ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதில்லை என்ற அவலம், பல ஆண்டுகளாக உள்ளது. தொழிற்கல்வி படிக்க ஆர்வமிருந்தும், பள்ளிகளில் தொழிற்கல்வி பாட திட்டம் இல்லாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.