மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மாதவன் தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலை தொலைநிலை கல்வி மூலம் மே 2014ல் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவு
அறிவிக்கப்பட்ட பாடப் பிரிவுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க
விரும்பும் மாணவர்கள், உரிய விண்ணப்ப படிவத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து, கட்டணத்துடன் 'கூடுதல் தேர்வாணையர், மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலை, நெல்லை-12' முகவரிக்கு செப்.,26க்குள்
விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு வெளியாகாத பாடப் பிரிவுகளுக்கு அவற்றின்
முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு
விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்