தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர் பணியிடங்களுக்கு நடத்திய போட்டித் தேர்வில்
தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
நபர்களுக்கு இன்று பணி நியமன கவுன்சலிங் நடக்கிறது.20132014ம் ஆண்டுக்கான
தட்டச்சர் காலிப் பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 போட்டித் தேர்வு நடத்தியது. இந்த
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 213 பேர் பள்ளிக் கல்வித்துறைக்காக
ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நியமன
ஆணை வழங்கும் கவுன்சலிங் இணைய தளம் மூலம் இன்று நடக்கிறது. தட்டச்சர்
பணிக்கு தகுதியுள்ள நபர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள
மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு
நடக்கும். சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடம் இல்லாததால் பணியிடம்
கிடைக்காதவர்கள், வேறு மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கும்
இன்று மதியம் 12 மணிக்கும் கவுன்சலிங் நடக்கும்.