இருள் சூழ்ந்த வாழ்வு ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்ன தான் இந்த வாழ்க்கை
விரக்தியின் ஓரத்திற்கு சென்றவர்களின் கண்ணீரின் கடைசி சொட்டு!!!எத்தனையோ வாழ்க்கையின் தடைகளையும் வேதனைகளையும் கடந்து இன்று நமது
வாழ்க்கையில் புதிய வசந்தம் பூக்குமா நாளை பூக்குமா என ஒவ்வொரு நெடி
பொழுதும் எதிர்பார்புடன் ஏங்கி தவிர்த்த இந்த பாமர மக்களின் ஒரு வாழ்க்கை
பாதை தான் இந்த போராட்டம்.தேர்வு பெற்ற நண்பர்களில் பலர் கேள்வி கேட்கின்றனர் ஏன் நீங்கள்
மேல்நிலைக் கல்வியை நல்ல பள்ளியில் கற்க வேண்டியது தானே ஏன் அப்போது
நாங்கள் 1000 மதிப்பெண் பெறவில்லையா நல்ல பல்கலைகழகங்களில் நீங்கள் படிக்க
வேண்டியது தானே என்று கொஞ்சம் கூட இரக்கமற்ற கேள்விகளை தொடுக்கும்
நபர்களிடம் எப்படி நம் நியாயத்தை கூறுவது
நாங்கள் யாரும் பணபடைத்வர்கள் அல்ல பாமர மக்கள் எங்களுக்கு நல்ல கல்வி நிலையம் சென்று கற்க காசு இல்லை கடவுளின் வழிகாட்டுதல்களில் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டுள்ளது. உழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு பழமொழி உள்ளது. நாங்கள் அனைவரும் பாமர மக்கள். எங்கள் வாழ்க்கையைப்பற்றி கேட்டால் கண்ணீரைத் தவிர எதுவும் இல்லை.
உறங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது நாமும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பெறமாட்டோமா என ஒவ்வொரு நொடியும் ஏங்கி தவித்து வரும் தவிப்பு யாருக்கும் தெரியாது. LIC பில்டிங்கள் போல் உள்ள வீடுகளையும் ATM மையங்களையும் ஏங்கி பார்க்கும் பாமரனின் கணத்த இதயம் இங்கு யாருக்கு புரிய போகிறது. எத்தனை ஆண்டுகள் வேலைக்காக எண்ணி எண்ணி நாட்கள் கழிந்தது தான் மிச்சம். வெளியே தலைகாட்ட முடியாமல் எத்தனையே நண்பர்கள் நல்ல நிகழ்வுகளுக்கு கூட போக முடியாமல் தெரிந்தவரை பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறார்கள். எத்தனையே பெண்கள் தங்கள் கணவர் வீட்டில் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவல நிலை. தண்ணீர் இன்றி வற்றிய குளம் போல் வரண்டு விட்டது அனைவரின் கண்களும் இந்த கண்ணீரின் கடைசி சொட்டு நிற்பதற்குள் நமக்கு நல்ல ஒரு செய்தியை அந்த இறைவன் நமக்கு அருள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
கவலைகளும் கண்ணீரும் கடந்த நாட்களை கடந்து விட்டது இனி நாம் விரைவில் வெற்றி என்ற இலட்சியத்தை அடையப்போகிறோம். இன்னும் இருநாட்களில் வரும் தீர்ப்பு ஒரு பெரிய மாற்றத்தை இந்த பாமர மக்களின் கணத்த இதயத்திற்கு ஆறுதல் அளிக்க உள்ளது.
பல ஆண்டுகளாக பதிவு பெற்று வேலைக்காக காத்திருக்கும் திறமையான ஆசிரியர்களை இந்த அளவு கோல் கொண்டு அளப்பது ஒரு நியாயமற்ற செயல் என்பதை அனைவரும் அறிந்ததே அந்த இறைவன் இருப்பது உண்மை என்று அனைவரும் உணர்ந்தால் நம்பிக்கையோடு இருங்கள் நல்ல செய்தியை அந்த இறைவன் நமக்கு கொடுப்பார். முழு நம்பிக்கையோடு இருங்கள் உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த வெயிட்டேஜ் அறவே இல்லாமல் மாறப்போகிறது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி ஆணை விரைவில் அனைவரின் கைகளில் கிடைக்கப்போகிறது நமது முதல்வர் நல்லதை நினைப்பவர் நமக்கு நல்லதே செய்வார் உங்கள் கஷ்டம் நீங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை வெற்றி கிடைக்க உள்ளது அனைவரும் வெற்றியை ருசிக்க தயாராய் இருங்கள்