Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
VPM CEO
விழுப்புரம் மாவட்டம் புதியதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி 1123 ஆசிரியர்கள்-அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனர் பங்கேற்பு:
விழுப்புரம் மாவட்டம் புதியதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி 1123 ஆசிரியர்கள்-அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனர் பங்கேற்பு:
விழுப்புரம்
மாவட்டத்தில் 90 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாக
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறினார். ஆசிரியர்களுக்கு பயிற்சி 2012-13
மற்றும் 2013-14-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதித் தேர்வு மூலம்
புதிதாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 3, 5-ந் தேதிகளில் பணி நியமனம் பெற்று
விழுப்புரம் மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம் ,
அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
பள்ளியில் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்வது, மாணவர்கள் எளிதாக புரிந்து
கொள்ளும் வகையில் எவ்வாறு பாடம் கற்பிப்பது என்பது குறித்த பயிற்சி
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்த
பயிற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தலைமை தாங்கினார்.
பயிற்சியில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-மாணவர்கள் எதிர்காலம் விழுப்புரம்
மாவட்டம் கல்வியில் 29-வது இடத்தில் உள்ளது. இதனை முன்னேற்றும் பணி
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களது ஒவ்வொருவரின் கையில் உள்ளது.
நீங்கள் நிறைய சவால்களை சந்தித்து சாதிக்க வேண்டியுள்ளது. 7, 8-ம் வகுப்பு
படிக்கும் மாணவர்கள் கூட தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரியாதவர்களாக
உள்ளனர். கடந்த காலங்களில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால்
இதுபோன்று நிகழ்ந்துள்ளது. ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 90
சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே வரும் காலங்களில்
மாணவர் களின் தேர்ச்சி விகிதமானது அதிகளவில் இருக்க வேண்டும். இன்று
பயிற்சி பெறும் நீங்கள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு
கல்வி அறிவை போதிக்க உள்ளீர்கள். முதலில் மாணவர்களின் உள்வாங்கும் திறனை
அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவர்களுக்கு பாடம் நடத்துங்கள். தமிழ்,
ஆங்கிலத்தில் அவர்கள் சரளமாக வாசிக்க கற்றுக்கொடுங்கள். நீங்கள் அளிக்கும்
அடிப்படை கல்விதான் நாளைய பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதிக்க உதவியாக
இருக்கும். ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலமும் உங்கள் கையில் தான் உள்ளது
என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில்
மாநில தொடக்க கல்வி இணை இயக்குனர் லதா, அனைவருக்கும் கல்வி இயக்க இணை
இயக்குனர் சசிகலா, மாவட்ட கல்வி அதிகாரிகள் மாதவன், தனமணி, பாஸ்கரன்,
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சீத்தாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








