அந்த வழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து விட்டு பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய வெயிட்டேஜ் முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித் தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








