Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உங்களுக்கு பிடித்ததை மட்டும் செய்யுங்கள் மற்றவர்களுக்காக வேண்டாம்:
இன்று பலருக்கு என்ன பிடிக்கும் என்றே தெரியவில்லை. அப்பா சொன்னார்,
அடுத்த வீட்டுக்காரர் சொன்னார் என்றுதான் படிப்பையும், வேலையையும்
தேர்ந்தெடுக்கிறார்கள்.3 வது ஆண்டு பொறியியல் படித்து
கொண்டிருந்த நித்யா, திடீரென மேலே படிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாள்.
அவளுடைய தந்தை அழாத குறையாக என்னிடம் சொன்னார். நான் அந்த பெண்ணிடம் பேசி
பார்த்தேன்.
’எனக்கு இன்ஜினியரிங் பிடிக்கல அங்கிள். எல்லாரும் சேராங்களேன்னு
சேந்துட்டேன். நீங்க எவ்வளவு அட்வைஸ் பண்ணாலும் என்னால் படிக்க முடியாது’
என்றாள்.
சுயபரிசோதனை
’நான் உனக்கு அட்வைஸ் பண்ண போறதில்ல. எனக்கு தெரிஞ்ச மனிதவள நிறுவனம்
ஒரு சுயபரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியிருக்கு. அதப்பயன்படுத்தி பார்த்து
எப்படி இருக்குன்னு சொல்லேன்’ என்றேன்.
நித்யா ஒத்து கொண்டாள். அந்த பரிசோதனையில் பொதுஅறிவு கேள்விகள் இல்லை.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்வாய் போன்ற 200 கேள்விகளுக்கு
ஒன்றரை மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும்.
இந்த மனவியல் சோதனையில் நித்யா சொன்ன பதில்களை ஒரு மென்பொருள் சல்லடை
போட்டு சலித்து ஆராய்ந்தது. அந்த முடிவுகளை பார்த்து மனவியல் வல்லுனர்
ஒருவர் நித்யாவுக்கு அறிவுரை சொன்னார்.
நித்யா பொறியியல் படித்து கொண்டிருப்பது மனவியல் வல்லுனருக்கு தெரியாது.
’உன் ஆழ்மனதில் விரும்பும் தொழில், ஆசிரியை, சமூகப்பணி அல்லது பத்திரிகைதுறை. பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகவே ஆகாது’ என்றார்.
அந்த முடிவு நித்யாவை புரட்டி போட்டது. ’இன்ஜினியரிங் எப்படியாவது
முடிச்சிடறேன் அங்கிள். அப்பறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்’ என்றாள்.
பொறியியல் பட்டம் வாங்கிய பின் ஜர்னலிசம் படித்தாள். இன்று ஒரு தேசிய நாளிதழில் பெரிய பதவியில் இருக்கிறாள்.
இது போன்ற மனவியல் சோதனைகள் 100 சதவீதம் வெற்றி தரும் என சொல்ல முடியாது.
அழுத்தமான தேடல்
ஆனால், 100 சதவீதம் வெற்றி தரும் வழி ஒன்று இருக்கிறது. அது நம் மனதில்
இருக்கும் ஒரு அழுத்தமான தேடல் உணர்வுதான். நம் மனம் விரும்பும் துறையில்
இருக்க வேண்டும். நிறைய சாதிக்க வேண்டும் என்ற தாகத்தை வளர்த்து கொண்டால்
போதும். அந்த தாகமே சரியான வழியில் செலுத்திவிடும்.
இரண்டு, மூன்று துறைகளில் நுழைந்து பார்த்து மனதுக்கு பிடித்ததை
தேர்ந்தெடுக்கலாம். கொஞ்சம் தாமதமாகலாம்; அதனால் தப்பில்லை. 30, 40
ஆண்டுகள் வேலை செய்யப்போகும் துறையை தேர்ந்தெடுக்க இரண்டு மூன்று ஆண்டுகள்
தாமதமானால் தப்பில்லை.
சென்ற நுõற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு இளைஞன் இப்படித்தான் தன் தேடலை
தொடங்கினான். முதலில் ஓவியனாக வேண்டும் என விரும்பினான்.
ஓவியக்கல்லலூரியில் பயிற்சி பெற்ற பின் அத்துறையில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை
என கண்டு கொண்டான். பின் பட்டயக்கணக்காளரிடம் பயிற்சி பெற்றான். கணக்கு
வழக்குகள் பார்ப்பதில் தனக்கு ருசியில்லை என கண்டான். வயதானாலும்
பரவாயில்லை என மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவனானான்.
மருத்துவ தொழிலும் தனக்கு ஏற்றது இல்லை என உணர்ந்து கொண்டான். பின்
நாடகங்கள் எழுத துவங்கினான். அதில் மனநிறைவு உண்டானது. அவன் உலகமே போற்றும்
எழுத்தாளராக மாறினான்.
மகிழ்ச்சி
அவரின் பெயர் சாமர்செட் மாம். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான இரண்டு
விஷயங்கள் - ஒன்று இயல்புக்கு ஏற்ற தொழில் அமையும் வரை அவருடைய தேடல்
நிற்கவில்லை. இரண்டாவது விஷயம் அதைவிட முக்கியமானது. தனக்கு என்று
இருக்கும் தொழில் எது என்று தெரிந்தவுடன் தேடலை நிறுத்திக் கொண்டு எழுத்து
வேலையில் இன்னும் தீவிரம் காட்டினார்.
இந்த தேடலும் தீவிரமும் இருந்தால் போதும் நம் வாழ்க்கை
மகிழ்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருக்கும் என்பதில் எந்த
ஐயமும் இல்லை.
- வரலொட்டி ரெங்கசாமி
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








