Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்துக்காக 21 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு:
பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தத்துக்காக 21 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்: இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு:
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.மொத்த வாக்காளர்இதுகுறித்து சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-இந்திய
தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல்-2015 கடந்த
15.10.14 அன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 2 கோடியே 74 லட்சத்து
20 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 615
பெண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 125 அரவாணிகளும் ஆக மொத்த 5 கோடியே 48
லட்சத்து 70 ஆயிரத்து 296 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.விண்ணப்பங்கள் வந்தனமேலும்,
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும், நீக்கம் மற்றும்
திருத்தத்துக்கான விண்ணப்பம் பெறும் பணி (சுருக்க திருத்த முறைக்கான பணி)
கடந்த அக்டோபர் 15-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பங்கள் 10-ந் தேதி வரை
பெறப்பட்டன.இதற்காக உரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு, அனைத்து
மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும்
கோரப்பட்டது.சிறப்பு முகாம்கள்வாக்காளர் பட்டியல் திருத்த
பணியில், உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அலுவலர்கள் களம் இறக்கப்பட்டனர்.
அக்டோபர் 26-ந் தேதி மற்றும் 2-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள்
நடத்தப்பட்டன.இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை எடுத்ததால், அதிக
அளவில் பெயர் சேர்ப்பு கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் வந்துள்ளன. குறிப்பாக
சிறப்பு முகாம் நடத்தப்பட்ட நாட்களில் இதற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில்
வந்தன.மொத்தம் 20.68 லட்சம் விண்ணப்பங்கள்மாவட்ட தேர்தல்
அதிகாரிகளிடம் இருந்து வந்த தகவலின்படி, தமிழகத்தில் மொத்தம் 20 லட்சத்து
68 ஆயிரத்து 420 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 16 லட்சத்து 28
ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் பெயர் சேர்ப்புக்கானவை ஆகும். அதில், 15
லட்சத்து 66 ஆயிரத்து 297 விண்ணப்பங்கள் நேரடியாகவும், 62 ஆயிரத்து 303
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டன.பெயர்
சேர்ப்புக்காக 225 விண்ணப்பங்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம்
இருந்து வரப்பெற்றுள்ளன. பெயர் நீக்கத்துக்காக 42 ஆயிரத்து 832
விண்ணப்பங்கள் (நேரடியாக 41 ஆயிரத்து 498, ஆன்லைன் மூலமாக 1,334) தாக்கல்
செய்யப்பட்டன. திருத்தத்துக்காக 2 லட்சத்து 86 ஆயிரத்து 208
விண்ணப்பங்களுக்கும் (நேரடியாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 869, ஆன்லைன் மூலம்
38 ஆயிரத்து 339); பெயர் இடமாற்றத்துக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 555
விண்ணப்பங்களும் (நேரடியாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 672, ஆன்
லைன் மூலம் 7,883) தாக்கல் செய்யப்பட்டன.இறுதி பட்டியல்இந்த
விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. எந்த தவறும்
இல்லாதபடியும், வாக்காளர் பெயர் மீண்டும் மீண்டும் இடம் பெறாத வகையிலும்
சரிபார்க்கப்பட்டு வருகிறது. களத்திற்கு சென்று சரிபார்ப்பது, விசாரணை
செய்வது மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருக்கும் பெயர்களை
நீக்குவது ஆகிய பணிகளும் நிறைவடைந்ததும், இறுதி வாக்காளர் பட்டியல் வரும்
ஜனவரி 5-ந் தேதியன்று வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








