நன்றி சிவ அனந்தகிருஷ்ணன்
முதல் தடையே உங்கள் மீதுள்ள உங்கள் நம்பிக்கை. தன்னம்பிக்கை என்பது செல்போன் சார்ஜ் போன்றது.. சில நேரம் நிரம்பி வழியும்.. பல நேரம் ஒன்றுமே இருக்காது. எனவே மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டாம் தடை – சமுதாய அழுத்தம்.. பெற்றோர்,உறவினர்,நண்பர்கள் என்று உங்களை வசைபாட ஒரு குழு இருந்துகொண்டே இருக்கும்..உளவியல் ரீதியான சோதனை இதுதான்.உங்கள் காலை இழுத்து தண்ணீருக்குள் புதைப்பதில் இவர்களுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.நீச்சல் அடித்து வெளிவரும் நபரே வெற்றி பெறுகிறார்
மூன்றாம் தடை – எப்படி படிப்பது என்று.. திக்குமுக்காட வைக்கும் தடையே இதுதான். ஒரு சரியான பாதையை வகுப்பது என்பது ஒரு கலை. அப்பாதை நேரானதோ அல்லது வளைவு நெளிவுகளை கொண்டதோ. இலக்கை அடைவதே இலக்கு என்று படிக்க வேண்டும்...








