நன்றி அண்ணாதுரை வேலுசாமி ஒரு கணவன்-மனைவி. கடுமையான குடும்பத் தகராறு...விவாகரத்தில் போய் நிற்கிறது...!
உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் எவ்வுளவோ தூரம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை...!
ஒரு நாள் ஒரு பெரியவர் வந்தார். "நான் சொல்வதை நீங்கள் செய்துவிட்டால்
நானே உங்களுக்கு முன்னின்று விவாகரத்து பெற்றுத் தருகிறேன்..ஆனால் அதில்
நீங்கள் தோற்று விட்டால் நான் சொல்வதைக் கேட்கவேண்டும்" என்றார்.
கணவனும் மனைவியும் ஒப்புக் கொண்டார்கள். பெரியவர் ஒரு நூலை எடுத்து வரச் சொன்னார். அவர்களும் இரண்டடி நீளமுள்ள மெல்லிய பூ கட்டும் நூல் ஒன்றை எடுத்து வந்தனர்.
"இதன் ஒரு முனையை நீங்கள் இருவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்...மறுமுனையை நான் பிடித்துக் கொள்கிறேன்.. நீங்கள் இருவரும் சேர்ந்து இழுத்து இந்த மெல்லிய நூலை அறுத்து விட வேண்டும்..இது தான் சோதனை" என்றார் பெரியவர்.
கணவன் மனைவி முகத்தில் ஓர் அலட்சியப் புன்னகை...ஒரு விரலால் அறுத்து விடக்கூடிய நூலுக்கு இருவரா? என்று...
கணவனும் மனைவியும் நூலை இழுத்தனர். ஆனால் பெரியவர் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூடவே சென்றார். எதிர் திசையில் கடைசி வரை இழுக்கவேயில்லை.. ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் கணவனும் மனைவியும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
பெரியவர் சொன்னார்.." இந்த மிக மெல்லிய நூல் தான் வாழ்க்கை... விட்டுக் கொடுக்கத் தெரிந்தால் என்றுமே அறுந்து போகாது"