நன்றி பெர்ஜின் ஞா
கோடைகாலம் முடிந்து புதிய வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மாணவர்களிடம் உரையாடினார்.சிறிய பேப்பர் ஒன்றை எடுத்து உங்களால் முடியாத காரியங்களை எழுதச்சொன்னார்.படம் வரைய முடியாது,பாட்டுப் பாட முடியாது ,மனப்பாடம் செய்யமுடியாது ,நடனம் ஆட முடியாதுஎன்று தன்னால் முடியாத பட்டியல் ஒவ்வொரு மாணவர்களிடம் நீண்டது.
அனைவரும் எழுதி முடித்ததும் மாணவர்கள் அனைவரையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார் .அங்கு ஒரு சிறிய குழியை தோண்டி. மாணவர்கள் தங்களால் முடியாது என்று எழுதிய பேப்பர்களை போட்டு மூடினார் .முடியாத காரியங்களைப் போட்டு மூடினால் தான் முடியக்கூடிய காரியங்களை முயற்சிக்க முடியும்.