
பெண்கள்
கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாலிபான்களின் அடக்குமுறையை
எதிர்த்து போராடிய 17 வயது பெண்ணான மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார்.
மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு
பின் உயிர் பிழைத்து, பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். இவர்களின்
இந்த முயற்சியை பாராட்டும் வகையிலேயே இருவருக்கும் நோபல் பரிசு
வழங்கப்படுகிறது.
இந்த பரிசை வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெறுகின்றது.
கைலாஷ் சத்யார்த்தி
மற்றும் யூசுப் சாய் மலாலா ஆகியோருக்கு ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில்
நோபல் பதக்கங்கள், பட்டயங்கள் மற்றும் பரிசுத்தொகையான 11 லட்சம் அமெரிக்க
டாலர்களுக்கான உறுதிப்பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.
நார்வே தலைநகர்
ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் இந்த தொகையை பெற்றுக்கொள்ளும் கைலாஷ்
சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் ஆகியோர் தலா 5.5 லட்சம்
டாலர்களாக பணத்தை பிரித்துக்கொள்வார்கள்.