அரசு முதன்மைச் செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில்
கூறப்பட்டுள்ளதாவது: அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு (இன்கிரீமென்ட்)
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியை அடிப்படையாக
கொண்டு நான்கு காலாண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில்
ஓய்வு பெற்றால் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு
அளிக்கப்படுவதில்லை என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த அரசு, ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறத்
தகுதியான நாளுக்கு முந்தைய நாள் ஓய்வு பெற்று இருந்தாலும் அவர்களுக்கு அந்த
ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என ஊதிய குறைதீர்வு பிரிவு
பரிந்துரை செய்ததை ஏற்றுக் கொண்டு அதன்படி ஊதிய உயர்வு வழங்க
உத்தரவிடுகிறது.







