பாஸ்போர்ட்டு
விண்ணப்பம் செய்வதற்கு தனியார் வங்கிகளின் கணக்கு புத்தகத்தையும் அடையாள
சான்றாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-வங்கி கணக்கு புத்தகம்பாஸ்போர்ட்டு
கேட்டு விண்ணப்பம் செய்யும்போது ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன்
ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளின் கணக்கு
புத்தகத்தை(பாஸ்புக்) மட்டுமே விண்ணப்பதாரரின் அடையாள சான்றாக
பயன்படுத்தலாம் என விதிமுறை உள்ளது.
இந்த விதிமுறையில் இருந்து
தற்போது தளர்வு வழங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் அனைத்து
தனியார் வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளின் கணக்கு
புத்தகத்தையும் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் வெளியுறவுத்துறை
உத்தரவிட்டு உள்ளது.105 வங்கிகள்இந்த புதிய உத்தரவின்படி 26
பொதுத்துறை வங்கிகள், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 56
கிராமப்புற வங்கிகள், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உள்பட 23 தனியார்
வங்கிகள் என மொத்தம் 105 வங்கிகளின் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டிய
கணக்கு புத்தகத்தையும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும்போது அடையாள
சான்றாக இணைத்து அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.