6-வது ஊதிய குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரி யர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம்போல் சமமாக வழங்கப்பட வில்லை. எனவே மத்திய அரசு வழங்கி உள்ள தர ஊதியத்துடன் கூடிய ஊதியத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த் தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து, தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும். தொடக் கப்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை, தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத் திட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிட வேண்டும்.
ஆசிரியர்களை பதிவுமூப்பு அடிப்படையில் நியமித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 8-ந் தேதி மாவட்ட தலைநகரங் களில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேக்டோ) அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தலைநகரான நாமக்கல்லில் நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி, அண்ணாசிலை, பரமத்தி ரோடு, செலம்ப கவுண்டர் பூங்கா வழியாக பூங்கா சாலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிரிய, ஆசிரியைகள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனர்.
21 சங்கங்கள் பங்கேற்பு
இந்த ஊர்வலத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழுவின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், மலர்க்கண் ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நடேசன் வரவேற்று பேசினார். முன் னதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினர். முடிவில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி நன்றி கூறினார்.
இந்த ஊர்வலத்தில் ஜாக்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் 21 ஆசிரியர் சங் கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.








