15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஊட்டியில் பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
15 அம்ச கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஊட்டியில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச் சந்தர் தொடங்கி வைத்தார். இதில், செய்தி தொடர்பாளர் சதீஷ் அபுதாஸ் தலைமை தாங்கினார்.
காலமுறை ஊதியம்
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் கூறியதாவது:- மத்திய அரசு அறிவித்து உள்ள அனைத்து படிகளையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். 50 சதவீத அகவிலைப்படி உயர்வை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை முதல் பாட மாக வைக்க வேண்டும். ஒப் பந்த மற்றும் தொகுப்பூதிய நியமனத்தில் பணிபுரியும் ஆசி ரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். மாண வர்களுக்கு அரசு 14 வித நலத் திட்ட உதவிகளை செய்து வரு கிறது. இதனை செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே மேல்நிலைப்பள்ளிகளில் இதற் காக ஒரு நலத்திட்ட அலு வலரை நியமிக்க வேண்டும்.
பள்ளிகளை மூடக்கூடாது
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தாய் மொழி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் மாணவர் களின் எண்ணிக்கையைஅடிப் படையாக கொண்டு பள்ளி களை மூடக்கூடாது.அனைத்து பள்ளிகளையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் பார்த்த சாரதி, ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகேசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அண்ணாதுரை, அன்பழகன் உள்பட ஏராளமான ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.








