பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 5–ந் தேதி தொடங்கியது. நேற்று கணிதம்,
விலங்கியல், ‘மைக்ரோ பயாலஜி’, ‘நியூட்ரிசன் மற்றும் டையடிக்ஸ்’ ஆகிய
தேர்வுகள் நடைபெற்றது. இதில் கணிதம், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்த 53
மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாணவர்கள்,
மதுரை மாவட்டத்தில் 8 மாணவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவர்,
நாமக்கல் மாவட்டத்தில் 2 மாணவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 மாணவர்கள்,
அரியலூர் மாவட்டத்தில் 2 மாணவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2
மாணவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 4 மாணவர்கள், கடலூர் மாவட்டத்தில் 14
மாணவர்கள், வேலூர் மாவட்டத்தில் 6 மாணவர்கள் என மொத்தம் 45 பள்ளிக்கூட
மாணவர்கள் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.
அதேபோல், மதுரை
மாவட்டத்தில் ஒரு மாணவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாணவர்கள், வேலூர்
மாவட்டத்தில் 3 மாணவர்கள் என மொத்தம் 8 தனித்தேர்வர்களும் காப்பி அடித்ததாக
பிடிபட்டுள்ளனர்.
ஆக மொத்தம் 45 பள்ளிக்கூட மாணவர்கள், 8
தனித்தேர்வர்கள் என மொத்தம் 53 மாணவர்கள் (கணித பாடத்தில் காப்பி அடித்ததாக
52 மாணவர்கள், விலங்கியல் பாடத்தில் காப்பி அடித்ததாக ஒரு மாணவர்)
பிடிபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







