வருங்கால வைப்புநிதி
ஓய்வூதியதாரர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 28-ஆம் தேதி
போராட்டம் நடத்தப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள்
சங்கம் (தமிழ்நாடு மண்டலம்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓய்வூதியதாரர்களுக்கு 1999-ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த
4.5 சதவீத ஓய்வூதிய உயர்வினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றத் தவறிவிட்டன. அதைக்
கண்டித்து வரும் ஏப்ரல்
28-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் மறியல்,
ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், நாடாளுமன்றம் நோக்கி பிச்சை எடுக்கும்
போராட்டமும் நடைபெறும். இதுதவிர பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற
உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.