Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்:
பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்:
பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
கணிதம்–விலங்கியல் தேர்வு
பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 5–ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று
வருகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து
86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதி வருகிறார்கள்.
பிளஸ்–2 தேர்வுகள் இம்மாதம் 31–ந் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.
எளிதாக இருந்தது
எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிரீத்திகா, பிரியங்கா ஆகியோர் கூறியதாவது:–
கணித
தேர்வு வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் 6
மதிப்பெண் வினாக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் எளிமையாக இருந்தது.
தவறான வினா?
10 மதிப்பெண் பிரிவில் 58–வது வினாவில் கழித்தல் குறியீடு
போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே
வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.
வினாத்தாளை
பார்த்ததும் 58–வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க
தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை
அளிக்கலாமா? என்று குழப்பமாக இருந்தது. சில மாணவர்கள் கேள்வியில்
கேட்கப்பட்டபடி பிளஸ் போட்டு விடை அளித்துள்ளனர். சிலர் மைனஸ் போட்டு விடை
அளித்துள்ளனர். எது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட
குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண்
அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இது
குறித்து கணித ஆசிரியர் கூறும்போது, இந்த கேள்வி முழுக்க முழுக்க
சரியானதுதான். கணிதத்தை மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களுக்கு இந்த
கேள்வி குழப்பமாக இருக்கலாம். ஆனால் புரிந்து படித்த மாணவர்களுக்கு இது மிக
எளிதானதாகும் என்று தெரிவித்தார்.
தேர்வு துறை
அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் இந்த கேள்விக்கு பதில்
அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு
அவர் அளித்த பதில் வருமாறு:–
பிளஸ்–2 கணித தேர்வில் கேட்கப்பட்ட
கேள்விகள் அனைத்தும் சரியானதுதான். குறிப்பாக பிரச்சினை கிளப்பிய 58–வது
கேள்வி குறித்து நாங்கள் பல கணித ஆசிரியர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள்
அனைவரும் சரியானதுதான் என்று கூறுகிறார்கள். மைனஸ் போட்டும் கேள்வி
கேட்கலாம், பிளஸ் போட்டும் கேள்வி கேட்கலாம். எனவே இந்த கேள்வி
சரியானதுதான். கருணை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் கேள்வியே
எழவில்லை.
இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.
விலங்கியல்
நுங்கம்பாக்கத்தில்
உள்ள கிரசென்ட் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கீர்த்திகா சந்திரசேகர்,
ஆப்ரின், சுமையா மற்றும் சபா ஆகியோர் விலங்கியல் தேர்வு குறித்து
கூறியதாவது:–
விலங்கியல் தேர்வு வினாக்கள் எளிதாகத்தான் இருந்தது.
ஒரு மதிப்பெண் வினாக்கள், 3 மதிப்பெண் வினாக்கள் ஆகியவை மிகவும் எளிதாக
இருந்தது. விலங்கியல் வினாக்களை பொறுத்தமட்டில் திரும்ப, திரும்ப
கேட்கப்பட்ட வினாக்கள் இல்லாமல் கடந்த ஆண்டுகளில் கேட்கப்படாத வினாக்கள்
கேட்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள கேள்விகள்
கேட்காமல் பெரும்பாலான வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து
கேட்கப்பட்டிருந்தது. நாங்கள் 5 மதிப்பெண் வினாவாக எதிர்பார்த்த சில
வினாக்கள் 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்தமாக
வினாக்கள் எளிதாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








