ஏற்கனவே
பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்வதற்காக உடமைகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்
கருவி, வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்
போன்ற பாதுகாப்பு வசதிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ளன.
‘ஸ்கேனர்’ கருவி
இந்த நிலையில் தற்போது சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு பயணிகளை
இறக்கி விடுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கார்கள் வந்து செல்கின்றன.
எனவே அந்த கார்களை பரிசோதனை செய்வதற்காக ‘ஸ்கேனர்’ கருவி பொருத்தப்பட
உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
பயணிகளின்
பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில்
காரின் அடிப்பகுதியை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட உள்ளது.
இந்த கருவி சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
வால்டாக்ஸ்
சாலையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு உள்ளே வரும் நுழைவுவாயில்
பகுதியிலும், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தை ஒட்டி சென்டிரலுக்கு உள்ளே
வரும் நுழைவுவாயில் பகுதியிலும் அமைக்கப்பட உள்ளது.
பயிற்சி பெற்ற போலீசார்
இதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில்
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இதற்கென்று
அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும்
இந்த ஸ்கேனர் கருவி அமைக்கப்படுவதன் மூலம் காரின் அடிப்பகுதியில் சமூக
விரோதிகள் வெடிகுண்டுகளை வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை
தடுக்கலாம். இதை தடுத்திடும் வகையில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அப்படி
காரின் அடிப்பகுதியில் வெடிகுண்டு இருந்தால், இந்த கருவி துல்லியமாக
படம்பிடித்து காட்டிவிடும். என்னதான் மனிதசக்திகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டாலும், இதுபோன்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள் பாதுகாப்பு
பணிக்கு அதிகமாக தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.







